தேவை, அவசர உதவி

இந்தப் பையன் நன்றாக எழுதுகிறான். சிறுகதைகளைப் படித்துப் பார்த்தேன், உருக்கமாக, நன்றாக உள்ளன. பிரசுரித்து ஊக்குவிக்க முடியுமா பார் என்று ஒரு துண்டுத் தாளில் எழுதிக் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் அசோகமித்திரன். ஈர்க்குச்சிக்கு மூக்குக் கண்ணாடி போட்ட மாதிரி என்னெதிரே நின்றுகொண்டிருந்த முத்துராமனுக்கு அப்போது அதிகம் போனால் இருபது வயதுதான் இருக்கும். ஆதிகால மணிரத்னம் படங்களில் இடம்பெற்ற வசனங்களை விடவும் குறைவாகவே பேசினான். கூர்ந்து கவனித்தாலொழியக் காதில் விழாத தொனியில். பயமாயிருக்குமோ என்று முதலில் நினைத்தேன். பசியாயிருக்கும் என்று … Continue reading தேவை, அவசர உதவி